சனி, 8 நவம்பர், 2014

பிளேட் டெக்டானிக் தியரி தவறு.


ஒரே இனத்தைச் சேர்ந்த தரைவாழ் விலங்கின் புதை படிவங்கள், கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில், கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுநரான, டாக்டர் ஆல்பிரட் கூறிய விளக்கம் தவறு, என்பது துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடற் கரையோரம் வாழ்ந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் ,மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்கள்,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் ,அட்லாண்டிக் பெருங் கடலுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர்,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது.எனவே மெசோ சாரசின் புதை படிவங்கள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததே காரணம் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்திருக்கிறது என்றும் ,தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் சுனாமி மற்றும் சூறாவளியால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் தொற்றிக் கொண்டு விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குத் தற்செயலாகப் பரவி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ் பெர்ஜன் என்ற பனிமலைகள் உள்ள தீவில் வெப்ப மண்டலப் பகுதியில் வளரக் கூடிய பெரணி மற்றும் கள்ளியின்  புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில்,அந்தத் தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,அதன் பிறகு வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் விளக்கம் கூறினார்.
அத்துடன் ரஷ்யாவைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரும் தனது வருங் கால மாமனாருமான விளாடிமிர் கோப்பருடன் சேர்ந்து,ஒத்த கால நிலையில் வளரும் தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தைப் பொருத்தினார்.
அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும் அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்குப பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.
அந்தப் பாஞ்சியாக் கண்டத்தைச் சுற்றிலும் பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் அதே போன்று ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்த,யூரேசியாக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இதே போன்று தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இனைந்ததாகவும்,அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டம் உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ,மூன்று கோடி ஆணுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து ஐரோப்பாக் கண்டத்தின் தென் அப்குதியுடன் இனைந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதே போன்று,இந்தியாவும் மடகாஸ்கர் நிலப் பகுதியும் இணைந்த நிலையில்,பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,எட்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் நிலப் பகுதியில் இருந்து பிரிந்த இந்தியாவானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலை உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
ஆனால் கடல் தரையைப் பிளந்து கோண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் காணப் படவில்லை.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கப்பல் படையில் பணியாற்றிய, டாக்டர் எட்மண்ட் ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர்,அவரின் கப்பலில் சோனார் என்ற கருவியின் மூலம் கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்திய பிறகு அந்த அலைகள் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு எதிரொளிக்கப் பட்டு திரும்ப வரும் நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம் கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பற்றி அறிந்தார்.போர் முடிந்த பிறகும் ஹாரி ஹெஸ் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அப்பொழுது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,ஒரு கடலடி மலைத் தொடரானது ,வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு உருவாகி இருப்பதும் அதில் பல எரிமலைகள் இருப்பதுடன் அந்தக் கடலடி எரிமலைத் தொடரில்,அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் அவர்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளம் பாறையாக உருவாகுவதாகவும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இதே போன்று மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், பூமிக்கு அடியில் இருந்து வரும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாக உருவாகும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழையக் கடல் தளப் பாறைகளை,கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளப் பாறையாக உருவாகுவதகவும்,இதே போன்று தொடர்ந்து நடை பெறுவதால்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,புதிய கடல் தளம் தொடர்ந்து உருவாகி கிழக்கு மற்றும் எம்ற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கோண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கோண்டு இருப்பதாகவும் ஹாரி ஹெஸ் கண்டங்கள் நகர்வதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்களும் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது பிளேட் டெக்டானிக் தியரி என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள சைபீரியாப் பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியும், கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கும் முன்பு இருந்தே,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் அலாஸ்காவிலும்,கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்திருப்பது,அந்தப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
டைனோசர்களானது குளிர் இரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படும் ஊர்வன வகை இனத்தைச் சேர்ந்த விலங்கு.ஊர்வன வகை விலங்கால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.பாலூட்டி வகை விளங்கினங்கள் உணவைச் செரிப்பதன் மூலம்,சுயமாக வெப்பத்தை உற்பத்தி செய்த பிறகு,உடல் வெப்பத்தைப் பாது காப்பதற்காக,மயிர் போன்ற தகவமைப்புகளையும் கொண்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி பாலூட்டி வகை விலங்கினங்களானது குட்டிகளை ஈனுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது.ஆனால் டைனோசர் உள்பட ஊர்வன வகை விலங்கினங்களானது முட்டைகளை இடுவதன் மூலமே இனப் பெருக்கம் செய்கிறது.
ஊர்வன வகை விலங்கின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால் அதற்குக் குறைந்த பட்சம் முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்காவின் வட பகுதியும்,சைபீரியாவின் கொல்வில்லி ஆற்றுப் பகுதியும் அமைந்து இருக்கும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து முதல் இருபது சென்டிகிரேட்.
அத்துடன் பூமி தான் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளளில்.ஆண்டுக்கு ஆறு மாதம் தொடர்ந்து பகலும்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இந்தக் காலமானது ஆர்க்டிக் இரவு என்று அழைக்கப் படுகிறது இந்தக் காலத்தில் வெப்ப நிலையானது தொடர்ந்து பல மாதங்கள் உறை பனிக்கும் கீழேயே இருக்கிறது.இந்த நிலையில் தாவரங்களால் தரையில் இருந்து இரையும் உறிஞ்ச இயலாது.
அதே போன்று, ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்திருக்க இயலாது.
ஆனால் துருவப் பகுதிகளில் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக கூடிய டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் துருவப் பகுதிகளில் எப்படி அடர்ந்த காடுகளும் டைனோசர்களும் வாழ்ந்திருக்கும் என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்விகளுக்கு விடை கூறும் வண்ணம் ,புவியியல் வல்லோன்ர்களுன் உயிரியல் வல்லுனர்களும் பல்வேறு யூகங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
குறிப்பாக டைன்சோர்கள் மட்கிய இலை தலைகளை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம் அல்லது பனிக் கரடிகளைப் போன்று அறிதுயிலில் ஆழ்ந்திருக்கலாம் அல்லது பனி மான்களைப் போன்று குளிர்கால இடப் பெயர்ச்சி செய்து இருக்கலாம்  என்றெல்லாம் பல்வேறு யூகங்களை முன்வைதித்ருக்கின்றனர்.
ஆனால் இது வரை எந்த விளக்கமும் உறுதிப் படுத்தப் பட வில்லை.
இந்த நிலையில் நார்வே நாட்டுப் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின்  எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருபதும்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்திலும் மடகாஸ்கர் தீவிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் உள்பட மற்ற விலங்கினங்களும் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.