செவ்வாய், 27 டிசம்பர், 2016

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

புத்தக உள்ளடக்கம்.

உண்மையில் புவியியல் வல்லுனர்களுக்கு பூமியில் என்ன நடக்கிறது என்று தெரியாது.பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகத் தவறாக நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் கரிய மில வாயுக்களானது, வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமியின் வெப்ப நிலையானது உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,நம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
முக்கியமாகத் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைகளில் இருக்கும் பனியாறுகள் என பூமியில் இருக்கும் மொத்தப் பணியும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடி வரைதான் உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் அப்படி நடந்தால் மிகவும் நல்லதே.ஏனென்றால் கடல் மட்டமானது இருநூற்றி நாற்பது அடி வரை உயர்ந்தால்,பல தீவுகள் மூழ்கும்,கண்டங்களின் ஓரப் பகுதிகள் மூழ்கும்,மற்ற படி பெரிய அளவில் பிரச்சினை எதுவும் ஏற்படாது.
ஆனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து பிரியும் பாறைக் குழம்பு நீரானது,கடலுக்கு அடியில் இருக்கும் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதே காரணம் ஆகும்.
இதில் ஆபத்து என்னவென்றால்,பூமியின் மொத்த எடையில் பாதிக்கும் மேற்பட்ட அளவில்,பாறைக் குழம்பு இருப்பதே ஆகும்.இந்த நிலையில் பூமியானது படிப்படியாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் பறைக் குழம்புக் கோளமாகக் கொதித்துக் கொண்டு இருந்த பூமியானது,மெல்ல மெல்ல குளிரத் தொடங்கியது.முதலில் மேற்பரப்பு மட்டும் குளிர்ந்து இறுகியதால்,புவியோடு உருவானது.அதன் பிறகும் குளிர்ச்சி அடைவது தொடர்ந்ததால்,பூமியின் அடியில் இருந்த பாறைக் குழம்பானது குளிரத் தொடங்கியது.அதனால் பாறைக் குழம்பில் இருந்து வாயுக்களும் நீரும் பிரிந்து வெளியேறியது.அத்துடன் பாறைக் குழம்பின் கண அளவானது அதிகரிக்கத் தொடங்கியது.அதனால் பூமிக்கு அடியில் இருந்து பெரிய பரப்பளவில் கண்டங்கள் உயர்ந்தன.அத்துடன் பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறியதால் கடல் உருவானது.
இன்றும் கூட பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது தொடர்ந்து குளிர்ந்து கொண்டு இருப்பதுடன்,பாறையாகிக் கொண்டு இருப்பதால் அதில் இருந்து பிரியும் நீரானது கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கொண்டு இருப்பதால்,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் கடலின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
இதில் உள்ள பேராபத்து என்னவென்றால்,பூமியின் அளவில் பாதிக்கும் மேற்பட்ட அளவில் பாறைக் குழம்பாக இருக்கிறது.இந்த நிலையில்,பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் தொடர்ந்து நீர் உருவாகிக் கொண்டே இருக்கும்.அதனால் கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கும்.
அதனால் நிலப் பகுதிகள் மட்டுமின்றி எவரெஸ்ட் உள்பட உலகில் உள்ள மலைப் பகுதிகள் யாவும் எதிர் காலத்தில் கடலால் மூழ்கடிக்கப் படும்.எனவே தரையில் வாழக் கூடிய தாவரங்கள் உள்பட விலங்கினங்களும் மொத்தமாக அழியும்.
 
கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு வேறு எதோ காரணம்-நாசா விஞ்ஞானி.

ஒரே காலகட்டத்தில் கடல் மட்டமும் உயர்ந்து இருக்கிறது,பனிப் பொழிவும் ஏற்பட்டு இருக்கிறது.
ஜப்பானில், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளிவந்த பாறைக் குழம்பு நீர்.
டைனோசர்கள் காலத்தில், கடல் மட்டமானது, தற்பொழுது இருப்பதைக் காட்டிலும், இரண்டு கிலோ மீட்டர், தாழ்வாக இருந்திருக்கிறது.
டைனோசர்களின் புதை படிவங்கள் எழுப்பிய கேள்விகள்.
துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு அடியிலும்,கடலுக்கு அடியிலும், தீவுகளிலும்,டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டன.