பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகிறது
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ரேடியோ கதிர் வீச்சு முறையில் தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

origo.jpg
அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் மூன்று சகோதரிகள் என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள் அமைந்து இருக்கின்றன.
அந்த எரிமலைப் பகுதியை எரிமலை இயல் வல்லுனர்கள் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வந்தனர்.
குறிப்பாக அந்த எரிமலைப் பகுதியின் மேல் பறந்து செல்லும் செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டது.
அவ்வாறு தரையை நோக்கி அனுப்பப் பட்ட ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த நேரம் துல்லியமாக பதிவு செயப் பட்டு, தரைக்கும் செயற்கைக் கோளுக்கும் இடையில் உள்ள தூரம் பதிவு செய்யப் பட்டு, தரையின் மேடு பள்ளங்கள் துல்லியமாக வரை படமாகத் தயாரிக்கப் பட்டது.
obeq.jpg
இதே போன்று தயாரிக்கப் பட்ட செயற்கைக் கோள் பதிவுகளை எரிமலை இயல் வல்லுனர்கள் வழக்கம் போல் ஆய்வு செய்த பொழுது, மூன்றாவது எரிமலைக்குத் தென் பகுதியில் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நிலம் பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது பதிவாகி இருந்தது.
குறிப்பாக அந்த உயர்வானது 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2000 ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எரிமலை இயல் வல்லுனர்கள், அந்த இடத்தில் பூமிக்கு அடியில் ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிற்கு பாறைக் குழம்பு திரண்டு ஒரு ஏரி போல உருவாகி இருப்பதாகவும், அந்தப் பகுதியில் பாறைக் குழம்பு ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டர் வீதம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டில், அந்த மேட்டுப் பகுதியில் 3௦0 க்கும் அதிக எண்ணிக்கையில் சிறிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது பதிவு செய்யப் பட்டு இருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் உயர்வதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

afinsar1
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலைகளை ரேடியோ கதிர் வீச்சு முறையில் செயற்கைக் கோள் மூலம் படம் எடுக்கப் பட்ட பொழுது, எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்பு வெட்டியதைப் போன்று நிலம் சில சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரித்து எரிமலை உயரும் பொழுதும்: அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியறி எரிமலையின் உயரம் குறையும் பொழுதும், எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதி உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றி மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

itainsar.jpg
இதே போன்று கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 2.8 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு வெட்டியதைப் போன்று நிலம் உயர்ந்து வளையங்கள் உருவாகி இருப்பது ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யப் பட்ட செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் நில அதிர்ச்சி ஏற்பட்ட லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு எரிமலைகளில் இருந்து வெளியேறும் ரேடான் என்ற கதிரியக்கத் தன்மையுள்ள வாயு வெளிப் பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால் இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலமாகவும் ரேடான் வாயுக் கசிவு மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.

haitialos.jpg
இதே போன்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவான பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் 35 சென்டி மீட்டர் உயரத்துடன் உருவாகி இருந்தது, தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த ஜப்பான் நாட்டின் ஆலோஸ் என்ற செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 50 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பதும், ஐரோப்பாவின் என்விசாட் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட தரைமட்ட மாறு பாட்டுப் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக