ஞாயிறு, 15 அக்டோபர், 2017

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்வதாகவும், அதனால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாகவும், அதனால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால், துருவப் பகுதிகளில் இன்றும் கூட பனி உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

துருவப் பகுதிகளில் இருக்கும் பனி உருகுவதற்கு பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதே காரணம் என்றால்,அதே துருவப் பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது.

குறிப்பாக,உலகில் உள்ள பனிக் கட்டிகளின்,தொண்ணூறு சதவீதப் பனியானது,தென் துருவப் பகுதியில்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருக்கிறது.

இந்த நிலையில்,செயற்கைக் கோள் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில்,அண்டார்க்டிக் கண்டத்தின் பனிப் படலங்களின் உயரம் அதிகரித்துக் கொண்டு இருப்பது ,நாசா விஞ்ஞானி டாக்டர் ஜே ஜேவாளி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில்,அண்டார்க்டிக் கண்டத்தில் ,உருகும் பனியை விட,பனிப் பொழிவால் உருவாகும் பனியானது,அதிகமாக இருப்பதாகவும்,எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக் கண்டத்தில் ,இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது தவறான விளக்கம் என்று,டாக்டர் ஜே ஜேவாளி, தெரிவித்து இருக்கிறார்.

எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறதா?

அதற்கு முன்பு,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எகிப்து இளவரசி கிளியோப்பாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரமானது, தற்பொழுது,கடலுக்கு அடியில், இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

இதே போன்று மாமல்லபுரத்தில் ஏழு கோபுரங்கள் கட்டப் பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.

ஆனால், தற்பொழுது,அங்கே கடற்கரையில் ஒரே ஒரு கோபுரம் மட்டுமே காணப் படுகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு,சுனாமியின் பொழுது கடல் நீர் உள்வாங்கிய பொழுது,கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்தனர்.

அதன் பிறகு,இந்திய தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில்,கடலுக்கு அடியில் கட்டிடங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது நிதர்சனமான உண்மை.

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன ?

தற்பொழுது பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் பட்டாலும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம்,கடந்த காலத்தில்,கடல் மட்ட உயர்வும்,பனிப் பொழிவும்,ஒரே கால கட்டத்தில்,நடை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாகக் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டம் உயர்ந்து இருப்பதுடன் ,அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக,அமெரிக்காவில்,புளோரிடா மாகாணக் கடற் பகுதியில்,கடலுக்கு அடியில்,நானூறு அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும்,பவளப் பாறைத் திட்டுகளின் தொன்மையை ஆய்வு செய்தனர்.

அக்ரோ போரா பால்மேட்டா என்று அழைக்கப் ப்படும்,அந்தப் பவள உயிரினங்களானது,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற கடல் பகுதியில்,வளரக் கூடியது.

எனவே, கடல் மட்டம் உயர்ந்தால்,அந்தப் பவள உயிரினங்கள் இறந்து விடும்.அப்பொழுது,அந்தப் பவளங்களால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருள்களானது திட்டுகளாகப் படிந்து விடும்.

அந்தப் பவளத் திட்டுகளின் தொன்மையை ,அமெரிக்க நாட்டுப் புவியியல் வல்லுனர்கள்,ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையிள்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டதில்,கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததால்,அந்தப் பவள உயிரினங்களானது,இறந்து படிவங்களாக உருவாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று,வட துருவப் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில்,இறந்து மட்கிக் கைக்கும்,தாவாரங்களின் பாகங்கள்,மகரந்தத் துகள்கள்,மற்றும் இறந்த விலங்கினங்களின் உடல் பாகங்கள்,அத்துடன், அந்த விலங்குகளின் வயிற்றில் இருந்த செரிக்காத உணவுப் பொருட்கள்,மற்றும்,விலங்கினங்களின் கழிவுகள்,ஆகியவற்றை ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர்,எஸ்கி வில்லெர்ஸ்லெவ் தலைமியிலான குழுவினர்,சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் அதிக அளவில் இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த பனி யானைகள் அந்த தாவரங்களை உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளானது, சத்துக் குறைவான புற்களை உண்டு வாழ்ந்ததாகவும்,ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

அதன் பிறகு ,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவானது மேலும் அதிகரித்ததாகவும்,பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவானது மேலும் அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்கள் அருகி விட்டதாகவும்,அதனால் சத்துக் குறைவான தாவரங்களை உண்ட பனி யானை இனமானது அழிந்து விட்டதாகவும்,அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,கடந்த ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டமானது, உயர்ந்து இருப்பதுடன்,அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே ,கடல் மட்டம் உயர்வதற்குப் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ,தவறான விளக்கம் என்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே, உண்மையில் கடல் மட்டம் உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.

சமீபத்தில்,நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,பூமிக்கு அடியில்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,பூமிக்கு மேலே இருக்கும் நீரை விட,மூன்று மடங்கு அதிக அளவு நீரானது,பூமிக்கு அடியில்,அறுநூறு கிலோ மீட்டர் ஆழத்தில்,இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

குறிப்பாக, அந்த நீரானது,ரிங்க்வூ டைட் என்று அழைக்கப் படும் பாறைப் படிக வடிவில் இருப்பதாகக் கண்டு பிடித்து இருக்கிறார்.

இதன் அடிப்படையில் அவர்,பூமிக்கு மேலே இருக்கும் நீரானது,பூமிக்கு அடியில் இருந்தே வந்து இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு,பூமியில் இருக்கும் கடல் நீரானது,பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த, லட்சக் கணக்கான விண் பாறைகளில் இருந்த நீரால் உருவானது, என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில்,ஜப்பானில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளி வந்து கொண்டு இருந்த நீரை,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்.ஒரு பாட்டிலில் சேகரித்து ஆய்வு செய்தார்.

அப்பொழுது,அந்த நீரானது,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது,அதில் இருந்து பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்தார்.

இதே போன்று,கடலுக்கு அடியில் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.

எனவே, கடலுக்கு அடியில் இருக்கும் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கோடிக் கணக்கான ஆண்டு காலமாக,பூமிக்கு அடியில் இருந்து சுரந்த நீரால்தான், கடல் உருவாகி இருப்பதுடன்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும் காரணமாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் கூட நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

அந்த நீர் கூட,நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பரியான பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் ஆகும்.

முக்கியமாக,பூமியின் எடையில் எண்பது சதவீதம் மாக்மா என்று அழைக்கப் படும் பாறைக் குழம்பால் ஆனது.

அந்தப் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் நீரே,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் தொடர்ந்து கலந்து கொண்டு இருக்கிறது.

இது போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெறுகிறது.

எனவே,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,பூமிக்குள் இருந்து சுரக்கும் நீரானது,தொடர்ந்து கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

முக்கியமாக,பூமியில் இருக்கும் பனி மொத்தமும் உருகினால் கூட,கடல் மட்டமானது அதிக பட்சம்,240 அடி வரைதான் உயரும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.

அப்படி கடல் மட்டமனது, 240 அடி உயர்ந்தால்,மூழ்கும்,கண்டங்களின் ஓரப் பகுதிகளுடன்,சில தீவுகள் மட்டுமே மூழ்கும்.

ஆனால் ,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,பூமிக்கு அடியில் இருந்து உற்பத்தி ஆகும்,பாறைக் குழம்பு நீர் ஆகும்.

இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,மடகாஸ்கர் தீவில்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சியில் உருவான,குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த விலங்கால்,கடலின் மேற்பரப்பில் நீந்தவோ மிதக்கவோ இயலாது.

ஆனால்,மடகாஸ்கர் தீவோ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.

எனவே,குள்ள வகை நீர் யானைகலானது,ஆப்பிரிக்கக் கண்டதிலிருந்து,தரைவழித் தொடர்பு மூலமாகவே,மடகாஸ்கர் தீவுப் பகுதியை அடைந்து இருக்க முடியும்,

எனவே,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது ,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து,சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருக்கிறது.

புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளில்,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது உறுதியாகிறது.

எனவே,இன்னும்,ஒரு கோடி ஆண்டு காலத்தில்,கடல் மட்டமானது, ஒரு கிலோ மீட்டர்
(3280) ,உயர்ந்தால், கடல் மட்டத்தில் இருந்து ,சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கும்,கண்டங்கள் எல்லாம்,அதாவது ஏழு கண்டங்களும்,கடலுக்கு அடியில்,மூழ்கி விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக